கொவிஷீல்ட் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

இங்கிலாந்தை சேர்ந்த AstraZeneca நிறுவனம் மற்றும் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கொவிட் தடுப்பூசியொன்றை உருவாக்கின.

இந்த தடுப்பூசி இந்தியாவில் Covishield என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது.

இதற்கிடையே AstraZeneca நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisement

இதேபோல் 51 வழக்குகள் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்டதுடன், இவ்வழக்குகள் மீதான விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் AstraZeneca நிறுவனம் நீதிமன்றில் அளித்த ஆவணத்தில், கொவிட் தடுப்பூசி ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக தி டெலிகிராப் ஊடகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில், இரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு (டி.டி.எஸ்.) வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும்.ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும். எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.