கொழும்பு தேசிய வைத்தியசாலை சிற்றூழியர்களின் அதிரடி முடிவு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லனவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் வரையில் தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பின் போது டொக்டர் ருக்ஷான் பெல்லான சிற்றூழியர்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராகவே அவர்கள் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் நேற்று (16) டொக்டர் ருக்ஷான் பெல்லனவை அவரது அலுவலகத்தில் வைத்து பலவந்தமாகத் தடுத்து வைத்து, சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் அவர் பாதுகாப்புப் படையினரின் தலையீட்டுடன் அலுவலகத்தை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement