கொழும்பின் சில வீதிகளுக்கு நாளை முதல் பூட்டு; பொலிஸார் விசேட அறிவிப்பு

கொள்ளுப்பிட்டி, கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுகளுக்கு அண்மித்த உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை மற்றும்  நவம் மாவத்தை ஆகிய வீதிகள் நாளை முதல் சில கட்டங்களின் கீழ் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வீதிகளை அண்மித்த பகுதியில் நிலத்தடி குழாய் பொறுத்தம் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை இதற்கு காரணம் என மாநகர பொறியியலாளர்கள் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை (05) முதல் 19 ஆம் திகதி வரை உத்தரானந்த மாவத்தை, நவம் மாவத்தையில் இருந்து ரயில் கடவை வரையிலான பகுதி மூடப்படவுள்ளது.

Advertisement

மேலும், பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் மார்ச் 04 ஆம் திகதி வரை உத்தரானந்த மாவத்தையில் இருந்து பெரஹெர மாவத்தை முதல் நவம் மாவத்தை வரையிலான   பகுதி மூடப்படவுள்ளது.

அதன் மூன்றாம் கட்டத்தின் கீழ், மார்ச் 5 ஆம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதி வரை  உத்தரானந்த மாவத்தையிலிருந்து பெரஹெர மாவத்தைக்கு அருகிலுள்ள ரொட்டுண்டா கார்டன் சந்தியின் பகுதி வரை மூடப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.