கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

தாண்டிக்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து விசேட அதிரடிப்படை புளியங்குளம் முகாமின் அதிகாரிகள் வவுனியா பொலிஸ் பிரிவு தாண்டிக்குளம் ஏ 09 வீதியில் உள்ள ONMART இராணுவ உணவகத்திற்கு அருகில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டனர்.

அங்கு மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவை கடத்துவதற்காக கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

அவரிடமிருந்த 05 கிலோகிராம் 124 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.