கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜினாமா! – கடிதத்தை ஏற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சுற்றாடல் அமைச்சுப் பதவியிலிருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்துள்ளார்.

அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அதனை ஏற்றுள்ளார்.

அதற்கமைய குறித்த சுற்றாடல் அமைச்சு பதவி ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

Advertisement

சர்ச்சைக்குரிய மருந்து பெறப்பட்டமை தொடர்பில் கடந்த பெப்ரவரி 02ஆம் திககதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல்நலனை கருதி அவர் நீதிமன்ற உத்தரவுக்கமைய, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.