கெஹெலியவின் விளக்கமறியல் நீடிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்று (08) கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கெஹெலிய ரம்புக்வெல்ல அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement