குழந்தைகளிடையே பரவும் நோய் – எச்சரிக்கும் வைத்தியர்கள்

இந்த நாட்களில் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் பரவுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனால் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

நீண்ட விடுமுறை நாட்களைத் தொடர்ந்து குழந்தைகள் வெளி இடங்களிலிருந்து வாங்கிய உணவுகளை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதுடன், இது ஒரு சாதாரண நிலை என லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

Advertisement

அடிக்கடி தளர்வான அல்லது தண்ணீருடன் மலம் வெளியேறுதல், வயிற்று வலி அல்லது பிடிப்புகள்இ பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை அதற்கான அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகள் தங்கள் குழந்தைகளிடம் இருந்தால், பெற்றோர்கள் உடனடியாக மருத்துவரை நாடுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் உணவு குறித்தும் கவனமாக இருக்க வேண்டும்.

அத்துடன், குழந்தைகள் மத்தியில் டைபாய்டு காய்ச்சல் பரவுவது குறித்தும் அவர் எச்சரித்தார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு வயிற்றுப்போக்கு இரண்டாவது முக்கிய காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.