குருநாகல் போதனா வைத்தியசாலையில் ஐவர் உயிரிழப்பு; விசேட நிபுணர் குழு தீவிர விசாரணை

குருநாகல் போதனா வைத்தியசாலையில் நீரிழிவு நோயாளர்களுக்கான இரத்த மாற்றுப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளர்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

விசாரணைகளுக்காக சுகாதார அமைச்சின் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு பணிப்பாளரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்தார்.  

Advertisement

இந்த குழுவில் இரத்த மாற்று தொடர்பான விசேட வைத்தியர்கள், இரத்த நோய்களில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள் மற்றும் வைரஸ் நோய்கள் தொடர்பான வைத்தியர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் இரத்த மாற்றுப் பிரிவு தற்போது மூடப்பட்டுள்ளது. 

அந்த பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்தார்.