குமார வெல்கம எம்.பிக்கு 3 மாத விடுமுறை

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு 3 மாத விடுமுறை வழங்குவதற்கு பாராளுமன்றில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குமார வெல்கம சுகவீனமுற்றிருப்பதால் அவருக்கு விடுமுறை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.