குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதி கோரும் எம்.பிக்கள்?

தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதுடன், அதன் மதிப்பு பத்து இலட்சம் ரூபாவாகும்.

தங்களது சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்பீட்டுத் தொகையை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றத்தின் சபைக் குழுக் கூட்டம் நடைபெறும் வேளையில் இந்த விடயம் குறித்தும் அங்கு கலந்துரையாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.