கிரிந்தி ஓயாவிலிருந்து ஒருவரின் சடலம் மீட்பு

வெல்லவாய, கிரிந்தி ஓயாவில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுருவ 3 ஆம் கட்டை பிரதேசத்தில் கிரிந்தி ஓயாவிலிருந்து நேற்று (21) இரவு ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

Advertisement

நீரில் மூழ்கி மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சடலம் வெல்லவாய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.