கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்

புதிதாக கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை மார்ச் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 4,232 பேர் நேர்காணலில் கலந்துகொள்ள உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இதேவேளை நேர்முக பரீட்சைகளின் பின்னர் வெற்றிடங்கள் மிக விரைவாக நிரப்பப்படும் என அசோக பிரியந்த மேலும் தெரிவிததுள்ளார்.

இதன்படி, நேர்காணல் பெறுபேறுகளின் அடிப்படையில் கிராம உத்தியோகத்தர் சேவையின் தரம் III இற்கு மொத்தம் 2,002 நபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.