கார் குடைசாய்ந்து விபத்து – மூவர் வைத்தியசாலையில்

தலைநகரில் இருந்த சாமிமலை பகுதிக்கு சென்ற சிறிய ரக கார் ஒன்று ஹட்டன் பிரதான வீதியில் விபத்துக்குள்ளானது.

நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதுடன், அந்த கார் வீதியை விட்டு விலகி சுமார் ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் ஏற்பட்ட பணி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

விபத்தில் மூன்றறை வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.