காணாமல் போயிருந்த இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

மத்துகம, வெல்கந்தல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மத்துகம, இந்தகொட பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் நேற்று (13) பிற்பகல் முதல் தனது வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக மத்துகம பொலிஸாருக்கும் முறைப்பாடு கிடைத்திருந்தது.

Advertisement

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மற்றும் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.