‘கலமுல்லே தசி’ கொலை: விளக்கமறியலில் இருந்த சந்தேக நபர் மரணம்

‘கலமுல்லே தசி’ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் நேற்று (27) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பலபிட்டியகொட,தெபுவன பிரதேசத்தை சேர்ந்த துஷார ருக்மால் சில்வா என்பவர் என களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

திடீர் சுகவீனம் காரணமாக நேற்று (27) அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலமுல்லே தசியை கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கடந்த 25ஆம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.