கனேடிய உயர்ஸ்தானிகர் – அனுர குமார சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவை ஜே.வி.பி தலைமையகத்தில் இன்று சந்தித்தார்.

இக்கலந்துரையாடலில் இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, தேசிய நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement