கனடா செல்கிறார் அனுர

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (20) மாலை கனடா நோக்கி பயணிக்கவுள்ளார்.

கனடாவில் வாழும் இலங்கையர்களிடம் உரையாற்றும் பல பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அனுரகுமார இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய மக்கள் படையின் கனேடியக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு பிரதான பொதுக்கூட்டங்களில் முதலாவது பொதுக்கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை கனடாவின் தலைநகர் டொரண்டோவிலும், இரண்டாவது 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வான்கூவரிலும் நடைபெறவுள்ளன.

Advertisement

இந்த பிரதான பொதுக்கூட்டங்களுக்கு மேலதிகமாக கனடாவில் வாழும் இலங்கை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினருடனான பல சிநேகபூர்வ சந்திப்புகளிலும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பங்கேற்கவுள்ளார்.