கனடாவில் 6 இலங்கையர்களின் கொலை துப்பாக்கி சூடு அல்ல – பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்

கனடா தலைநகர் ஓட்டாவா பகுதியில் 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக அந்த நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவமானது துப்பாக்கி பிரயோகம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது கத்தியை போன்றதொரு கூரிய ஆயுதத்தினாலேயே இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரை மேற்கோள்காட்டி அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.