கண் – கால் வலி தாங்க முடியாமல் தவறான முடிவெடுத்த நபர்

கண் மற்றும் கால் வலி காரணமாக தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார்.

புதிய செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியை சேர்ந்த கோபால் புஸ்பராசா (வயது 65) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சில காலங்களுக்கு முன்னர் கீழே விழுந்த நிலையில் இரண்டு கால்களிலும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கிளிப் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவருக்கு கண் வலியும் இருந்துள்ளது.

Advertisement

வலியை தாங்க முடியாத நிலையில் அவரது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கிட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வேளை இடையில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.