கண்டியில் தாயும் மகளும் இணைந்து நடத்தி வந்த விபச்சார விடுதி

பெரிய வீடொன்றில் தாயும் மகளும் நடத்தி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த மூன்று பெண்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹந்தானை பிரதேசத்தில் பெரிய வீடொன்றிலேயே இவ்வாறு விபச்சார செய்து வந்துள்ளனர்.

விபச்சார மையத்தின் மேலாளராக மகளும், தாய் காசாளராகவும் பணிபுரிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

இந்த விபச்சார விடுதி தொடர்பில் இரண்டு வாரங்களாக விசாரணைக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் 5,000 ரூபாவிற்கு பெண்ணொருவரை கொள்வனவு செய்த போதே சந்தேகநபர்களை கைது செய்ததாக தெரிவித்தனர்.