கணவன் வெட்டிக் கொலை – உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி

வவுனியா – நெடுங்கேணி – கிரிசுட்டான் பிரதேசத்தில் வீடோன்றில நேற்று மாலை வெட்டுக்காயங்களுடனான ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுவதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், அவரது மனைவியான 37 வயதுடைய லோகநாதன் பரமேஸ்வரி என்பவரும் விஷம் அருந்தி அருகிலிருந்த வீட்டில் விழுந்திருந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அண்மைகாலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலத்தின் பிரேதப் பரிசோதனை வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் நடைபெறவுள்ளது.

மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.