கணவனை கொன்று ஏரியில் வீசிய மனைவி

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவனை கொலை செய்துவிட்டு, இரவில் சடலத்தை தோளில் சுமந்து சென்று மேல் கிரிபாவ ஏரியில் வீசி எறிந்த மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேல் கிரிபாவ, 4 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய உதய குமார என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை தோளில் சுமந்து சுமார் 150 மீற்றர் தூரம் வரை சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

சந்தேகத்தின் பேரில் 33 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.