கணவனின் மறைவை தாங்க முடியாமல் தவறான முடிவெடுத்த மனைவி

நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் உயிரிழந்ததால் மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

நேற்று (18) மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா வடக்கு, நெடுங்கேணி, 6 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் அவசரமாக நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

அங்கிருந்து குறித்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தயாராகிய போது குறித்த குடும்பஸ்தரின் மனைவி வவுனியா வைத்தியசாலை செல்வதற்கான பொருட்களை எடுத்து வர வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.

குறித்த தகவலை வீட்டிற்கு சென்றிருந்த அவரது மனைவிக்கு தெரியவந்ததையடுத்து, கணவனின் இறப்பை தாங்க முடியாது மனைவி தவறான முடிவெடுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவத்தில் 18 மற்றும் 15 வயதுடைய இரு பெண் பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ராமச்சந்திரன் ரவீந்திரன் மற்றும் மனைவியான 49 வயதுடைய ராமச்சந்திரன் ஜோதீஸ்வரி ஆகிய இருவருமே உயிரிழந்ள்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.