கட்டுகுருந்தவில் ஒருவர் சுட்டுக்கொலை

களுத்துறை, கட்டுகுருந்தவில் நேற்று (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவரது 7 வயது மகளும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய அசுரமுனி தஸ்மின் மதுவந்த சில்வா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

அவர் தனது வீட்டில் தனது மூன்று குழந்தைகளுடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போதே அடையாளம் தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸாரின் விசாரணைகளின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் கொலை உட்பட பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.