கடும் வெப்பத்தால் பறிபோன உயிர்

கடுமையான வெப்பத்தால் ஒருவர் உயிரிழந்த செய்தி அக்குரெஸ்ஸ பகுதியில் பதிவாகியுள்ளது.

விஜேசிங்க தெத்துவகே தர்மசேன என்ற 72 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் பல வருடங்களாக இதய நோய்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனால் அவர் உயிரிழக்கும் அளவுக்கு உடல்நிலை மோசமாக இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement

நிகழ்வொன்றில் பங்கேற்று தனது மனைவியுடன் வீடு திரும்பும் போது அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிது தூரம் சென்ற பின்னர் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆகியுள்ளதுடன், அவர் தனது மனைவியை பேருந்தில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பின்னர், கடும் வெப்பமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் குறித்த நபர் மோட்டார் சைக்கிளை ஒரு கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பாதயாத்திரையாகத் தள்ளிச் சென்ற விதம் அருகிலிருந்த புகைப் பரிசோதனை நிலையத்தின் பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அவர் சாலையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையில் அவர் இதய செல்கள் செயலிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.