கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக நேற்று (25) காலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 1,000 மில்லிக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும் இவை விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது பாவனைக்காக வைத்திருந்தாரா போன்ற கோணத்தில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement