கஞ்சா கலந்த மாவாவை விற்பனை செய்த ஒருவர் கைது

யாழ்ப்பாணம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா கலந்த மாவா விற்பனை செய்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

நெல்லியடி முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாலை பகுதியில் நேற்று (08) விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டனர்.

துன்னாலை கிழக்கு, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

அவரிடமிருந்து 119 கிராம் 40 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவா மீட்கப்பட்டது.

இவர் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைக்காக அவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்