‘ஒலு மரா’ கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரான ‘ஒலு மரா’ நேற்று (07) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொஸ்வத்த பிரதேசத்தில் மேலும் மூவருடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்களிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisement

மீகஹவொல – கொஸ்வத்த வீதியில் இடம்பெற்ற அவசர பொலிஸ் சோதனைச் சாவடியின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒலு மராவுடன் கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் 31, 30 மற்றும் 28 வயதுடைய கிரிமெட்டியான, சாந்த ஆனா புர மற்றும் கொஸ்வத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி, கிரிமெட்டியான வத்த பகுதியைச் சேர்ந்த ‘ஒலு மரா’ என்பவர் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த போது மாரவில பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர், பூஸ்ஸ சிறைச்சாலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் அண்மையில் பிணையில் விடுதலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.