Advertisement

ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான திமிங்கல வாந்தியுடன் இருவர் கைது

ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான திமிங்கல வாந்தியை (ஆம்பர்) வைத்திருந்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படை புத்தளம் முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருஞ்சன்பிட்டிய பகுதியில் நேற்று (28) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ஒன்றரை கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 23 கிலோ நிறையுடைய திமிங்கல வாந்தி (ஆம்பர்) வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.