ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்…! 

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 5 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்றையதினம்(07) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் இன்றையதினம்(07) அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தவுள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, அவரது வருகையின் போது, மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறமாட்டாது என நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Advertisement

அத்துடன், இன்றைய ஆரம்ப நிகழ்வில்,  வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.