ஐஸ் – கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து பமுனுகம பொலிஸ் பிரிவில் உள்ள நெங்குரம உணவகத்திற்கு முன்பாக அண்மையில் (01) சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.

இதன்போது 10 கிராம் 59 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 52 கிராம் கேரளா கஞ்சாவை கடத்தி சென்ற உஸ்வெட்டகெய்யாவ பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

மேலதிக விசாரணைகளுக்காக அவர் பமுனுகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.