ஐக்கிய மக்கள் சக்தியுடன் புதிய அரசியல் கூட்டணி

ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் சுதந்திர மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே கூட்டணி அமைப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (05) காலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

சுதந்திர மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ்.குமாரசிறி மற்றும் (வைத்தியர்) உபுல் கலப்பத்தி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.