எரிவாயு விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

அதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 3,940 ரூபாவாகும்.

அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 70 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,582 ரூபாவாகும்.

Advertisement

2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 740 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.