Advertisement

எரிவாயு விலை குறைகிறது

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.

புதிய விலைகள் இன்று காலை அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

12.5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டர் தற்போது 4,115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

அதனை 4,000 ரூபாவிற்கும் குறைவான விலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.