எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி 95 ஒக்டேன் பெற்றோல் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டு 440 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.

சுப்பர் டீசல் விலை 72 ரூபாவால் குறைக்கப்பட்டு 386 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.

Advertisement

மண்ணெண்ணெய் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டு 245 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.

பெற்றோல் 92 ஒக்டேட் மற்றும் ஒட்டோ டீசல் விலைகளில் மாற்றமில்லை.

இதற்கு அமைய லங்கா ஐஓசியும் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளது.