எச்சரிக்கையுடன் செயற்படுமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அடிப்படையில் வழங்கும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரியுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அதிக விலைக் கொடுத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அடிப்படையில், பெற்றுக்கொண்டுள்ளமை யுக்திய போதைப்பொருள் விசேட சோதனை நடவடிக்கையின் போது தெரியவந்துள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அடிப்படையில் வழங்கும் போது, அவதானத்துடன் செயற்படுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement