உலக வரலாற்றை மாற்றி எழுதிய பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் போட்டித் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக் கொண்டன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

Advertisement

துடுப்பாட்டத்தில் பிலிப் சால்ட் 75 ஓட்டங்களையும் சுனிர் நரேன் 71 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் 262 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 18.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜானி பேர்ஸ்டா ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும் ஷஷாங்க் சிங் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் மற்றும் பிரப்சிம்ரன் சிங் 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதனூடாக ரி20 கிரிக்கெட் வரலாற்றில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக இது பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தென் ஆபிரிக்க அணி சேஸிங் செய்த 259 ஓட்டங்கள் உலக சாதனையாக இருந்ததுடன் அந்த சாதனையை நேற்றைய தினம் பஞ்சாப் அணி முறியடித்துள்ளது.

அத்துடன் இந்த போட்டியில் இரு அணிகளும் இணைந்து மொத்தமாக 42 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளதுடன் ஒரு ரி20 போட்டியில் இரு அணிகளும் இணைந்து பதிவு செய்த அதிகபட்ச சிக்ஸர்களாகவும் இது பதிவாகியுள்ளது.

மேலும் இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 23 சிக்ஸர்கள் அடித்துள்ளதுடன் இதுவே ஒரு அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்களாகவும் பதிவாகியுள்ளது.