‘உரித்து’ அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

‘உரித்து’ தேசிய வேலைத் திட்டத்தின் அபிலாஷைகளை நனவாக்கி, மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், உரித்து தேசிய செயற்பாட்டு அலுவலகம், 1908 என்ற அவசரத் தொலைபேசி இலக்கம் மற்றும் 0114 354600 / 0114 354601 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தமது கோரிக்கைகளைப் பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.