உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது எமக்கு தெரியும்..! – மைத்திரியின் அறிவிப்பால் பரபரப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும்  நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் இன்று அது தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது என்பது தனக்குத் தெரியும் எனவும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் பயங்கரவாதிகள் தொடர்பிலான விடயம் சரியானது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். 

Advertisement

தன்னால் கைது செய்யப்பட்டவர்களே நீதிபதிகள் குழாத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், 
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாகவே யார் செய்தார் என்பதனை எவரும் இன்னும் கூறவில்லை என தெரிவித்தார். 

இது தொடர்பில் கருத்துக் கூறுமாறு நீதிமன்றம் தன்னிடம் கோரிக்கை விடுத்தால், அல்லது உத்தரவு பிறப்பித்தால், யார் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டார்கள் என்பதனை கூறுவதற்கு தான் தயாராகவுள்ளதாக அவர் கூறினார். 

எவ்வாறாயினும், அதனை மிகவும் இரகசியமாக பேணுவது நீதிபதிகளின் பொறுப்பு எனவும்  மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.