உயர்தர மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் விசேட திட்டம் – கல்வி அமைச்சரின் அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்குவதற்கான விசேட திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். 

இந்த திட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதியிலிருந்து நாடு முழுவதும் உள்ள 300க்கு மேற்பட்ட மையங்களில் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.