ஈரான் ஜனாதிபதி நாளை இலங்கை வருகிறார்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஈரானின் 529 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வரவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.