இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயெல் பிரியந்த பதவி விலகியுள்ளார்.

இதனை அமைச்சர் கஞ்சன விஜேசேகர உறுதிப்படுத்தியுள்ளதுடன், அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்பித்ததாக தெரிவித்தார்.

அத்துடன், பாடசாலை மாணவர்களின் கல்வியை குப்பி விளக்கு வெளிச்சத்தில் மேற்கொள்ள முடியும் என தெரிவித்தமைக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Advertisement