இலங்கை அணியின் இரண்டாவது பயிற்சிப் போட்டி இன்று

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு முன்னர் இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது பயிற்சிப் போட்டி இன்று அயர்லாந்து அணிக்கு எதிராக அமெரிக்காவின் லுண்டர்ஹில் நகரில் நடைபெறவுள்ளது.

போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நெதர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Advertisement

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளதுடன், இலங்கை அணி D குழுவின் கீழ் போட்டியிடவுள்ளது.