இலங்கையை வீழ்த்திய நெதர்லாந்து

டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

Advertisement

இந்த நிலையில் 182 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 161 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.