இலங்கையில் அறிமுகமாகும் புதிய எரிபொருள் நிறுவனம்

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்ய, அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவனம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது.

கடந்த 22ம் திகதி மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, யுனைடட் பெற்றோலிய நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 50 புதிய எரிபொருள் நிலையங்களை அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement