இலங்கையின் முதல் ஸ்ட்ரோபரி கிராமம் நுவரெலியாவில்

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபரி சாகுபடி மாதிரிக் கிராமத்தை நுவரெலியாவில் நிறுவுவதற்கு, விவசாய அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட, புதிய பயிர்களை நோக்கி விவசாயிகளை வழிநடத்துவதே இதன் நோக்கமாகும்.

இதன் முதல் கட்டமாக நுவரெலியாவில் 40 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு, ஸ்ட்ரோபரிச் செடிகள், புதிய தொழில்நுட்பம் மற்றும் நீர் விநியோகம் ஆகியவை வழங்கப்படவுள்ளதாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

இந்த திட்டத்திற்கு ஒரு விவசாயிக்கு தலா 13 இலட்சம் ரூபா செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 750,000 ரூபா விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்படுவதோடு, மீதமுள்ள 6 இலட்சத்தை அந்தந்த விவசாயிகள் முதலீடு செய்ய வேண்டும் என குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.