இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக அதிகரிப்பு

கடந்த காலத்தின் இறுதி காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற நாணய கொள்கை மீளாய்வு கூட்டத்தின் போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியை விட இது 1.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதேவேளை, நாட்டின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் 4.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.