இலங்கையின் இளநீருக்கு வெளிநாடுகளில் அதிக கேள்வி

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, முருதவெல ருவாவ கிராமத்திற்கு அருகாமையில் இரண்டாவது செவ்விளநீர் பயிர்ச்செய்கை கிராமம் நிறுவப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நேற்று (25) இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏற்றுமதிக்கு செவ்விளநீர் பயிரிடும் முதல் கிராமம் கடந்த ஆண்டு முருதவெலவில் தொடங்கப்பட்ட நிலையில், இவ்விரு கிராமங்களிலும் 10,000 செவ்விளநீர் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

Advertisement

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை செவ்விளநீர் அதிக கிராக்கி காணப்படுவதாகவும், மேலும், பல நாடுகளில் இருந்தும் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் செவ்விளநீருக்கு அதிக கிராக்கி இருப்பதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.