இலங்கையர்கள் மூவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

இலங்கையைச் சேர்ந்த மேலும் 3 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் உட்பட 3 பேரே இவ்வாறு நேற்று காலை தனுஷ்கோடி – ஐந்தாம் மணல் திட்டு பகுதியை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி – பூநகரி பகுதியிலிருந்து அவர்கள் படகு மூலமாக சட்டவிரோதமாக தமிழகத்துக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

இந்தநிலையில், மீனவர்கள் வழங்கிய தகவலுக்கமைய, இராமேஸ்வரம் கரையோர பொலிஸாரால் குறித்த மூவரும் மீட்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மண்டபம் கரையோர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.