இறுதி போட்டியிலிருந்து விலகிய இலங்கையின் பிரபல வீரர்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க உபாதை காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான எதிர்வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். 

இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

எனவே டில்ஷான் மதுஷங்க பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்கமாட்டார் என சிறிலங்கா கிரிக்கெட் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

இரு நாடுகளுக்கு இடையிலான இறுதி ஒரு நாள் போட்டி நாளை (18) நடைபெறவுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் நாளைய போட்டி இரு அணிகளுக்கும் தீர்மானமிக்கதாக அமையவுள்ளது.